சுவிஸ் மக்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் தொடர்பில் முக்கிய தகவல்

0

சுவிஸில் மிக விரைவாக கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

ஆனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக பெடரல் நிர்வாகம் தடுப்பூசி சான்றிதழ் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், ஜூன் மத்தியில் தடுப்பூசி சான்றிதழ் தொடர்பில் உறுதியான தகவல் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

ஆனால் அரசாங்க இணைய பக்கத்தில் தடுப்பூசி சான்றிதழ் மாதிரி ஒன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் தொடர்பில் சந்தேகம் நீடித்துள்ளது.

தடுப்பூசி சான்றிதழை பொறுத்தமட்டில், செயலியில் பயன்படுத்தப்படும் விதமாகவும், நகல் எடுத்து பயன்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெயர், பிறந்த திகதி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களும், தடுப்பூசி எடுத்துக்கொண்ட திகதி, கொரோனா சோதனை செய்து கொண்ட திகதி, பெற்றுக்கொண்ட தடுப்பூசியின் பெயர் உள்ளிட்ட தகவல்களும் உட்படுத்தப்பட்டிருக்கும்.

மேலும், கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்கும் தடுப்பூசி சான்றிதழ் அளிக்கப்பட உள்ளது.

மட்டுமின்றி, குறித்த தடுப்பூசி சான்றிதழலின் காலாவதி என்பது இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டதன் பின்னர் 6 மாதங்கள் வரை எனவும்,

கொரோனா சோதனை மட்டும் எடுத்துக் கொண்டவர்களுக்கு அடுத்த 72 மணி நேரம் மட்டுமே அந்த சான்றிதழ் செல்லுபடியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here