சுவிஸ் சென்றால் ஆபத்து! பயணிகளை செல்ல வேண்டாம் என அறிவித்த நாடு

0

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் கூட சுவிட்சர்லாந்துக்கு செல்லவேண்டாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் சுவிட்சர்லாந்துக்கு சென்றால்கூட, கொரோனா தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது.

அந்நாட்டின் நிலைமை அப்படி உள்ளது, ஆகவே சுவிட்சர்லாந்துக்கு செல்லவேண்டாம் என அமெரிக்கா தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் கொரோனா நிலைமையும் மோசமாகத்தான் உள்ளது. நாளொன்றிற்கு சுமார் 2,500 பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 60 பேர் வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக சுவிஸ் பெடரல் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரு பக்கம் அமெரிக்கா தன் குடிமக்களை சுவிட்சர்லாந்துக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கும் நிலையில், இன்னொரு பக்கம் சுவிட்சர்லாந்தும், வரும் இலையுதிர்காலத்தில் பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக சுவிஸ் உள்துறை அமைச்சர் Alain Berset தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here