சுவிஸ்லாந்தில் இரு விமானங்கள் விபத்து! குழுந்தை உட்பட ஐவர் பலி

0

சுவிஸ்லாந்து- ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஒரு விமானத்தில் விமானி மட்டும் பயணித்ததாகவும், மற்றொரு விமானத்தில் குழந்தை உட்பட நான்கு பேர் பயணித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதில் பயணித்த குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆல்ப்ஸ் மலைத்தொடரின் கிழக்கே ஹூபர்டன் என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது இரண்டு விமானங்களும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

நீண்ட தேடுதலுக்கு பின்னர் நான்கு பேர் பயணித்த சிறிய ரக விமானம் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஹூபர்டன் பகுதியில் மீட்புகுழுவினரால் மீட்க்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த நான்கு பேரும் உயிரிழந்தனர்.

விபத்து நடைபெற்ற பகுதிக்கு அருகே மற்றொரு சிறிய ரக விமானத்தையும் மீட்புக்குழுவினர் கண்டுபிடித்தனர்.

அந்த விமானத்தில் விமானி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இரு விமானங்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்தவர்களின் அடையாளம் குறித்து தகவல் எதுவும் வெளியாக வில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here