சுவிஸில் வீசும் துர்நாற்றம்..! மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

0

சுவிட்சர்லாந்தில் St. Gallen நகரிலுள்ள Burgweiher என்ற பகுதியில் வாழும் மக்கள், கடும் துர்நாற்றத்தால் அவதியுறுவதாக புகார் அளித்துள்ளனர்.

கொரோனா தடை காரணமாக அலுவலகத்திற்கு செல்லமுடியாமல் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் ஒருவர், நாள் முழுவதும் வீட்டிலிருந்தபடியே இந்த நாற்றத்துடன் வேலை செய்யவேண்டியிருக்கிறது என்கிறார்.

அந்த துர்நாற்றத்திற்கு காரணம், அந்த பகுதியிலுள்ள வயல்களிலும் புல் வெளியிலும் உரமிடப்படுவதாகும்.

சுவிட்சர்லாந்தில், சில பருவகாலங்களில் திட உரமும், சில பருவகாலங்களில் திரவ உரமும் பயன்படுத்தப்படுவதுண்டு.

இப்போது திரவ உரம் பயன்படுத்தப்படுவதால், அதிலிருந்து நீண்ட நேரம் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

பெரும்பாலானோர் கொரோனா விதிகள் காரணமாக வீடுகளுக்குள் அடைந்து கிடப்பதால், இந்த ஆண்டு அந்த நாற்றம் பெரிதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here