சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பிரஜைக்கும் 50 பிராங்க் அன்பளிப்பு வழங்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமை காரணமாக சுவிட்சர்லாந்து பாரியளவு பாதிப்பினை எதிர்நோக்கி இருந்தது.
இந்நிலையில் கொரோனா நோயிலிருந்து முற்றாக விடுபடும் நோக்கில் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் தடுப்பூசிகளை மிக விரைவில் பெற்றுக்கொள்ள, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந“ம திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசினால் கொண்டுவரப்பட்ட இந்த அன்பளிப்பு திட்டத்தினை லூசெர்னின் அரசியல் உறுப்பினர்கள் பாரியளவில் விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.
நாட்டின் மீது அன்பு இல்லாதவர்கள் போல் பிரஜைகளை கருதி, இவ்வாறான வெகுமதிகள் வழங்கி தடுப்பு ஊசி ஏற்றிக் கொள்ள அறிவுரை அளிப்பது கண்டிக்கத்தக்கது.
ஒரு நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் தமக்கான சுய பாதுகாப்பையும் நாட்டினது பாதுகாப்பையும் உணர்ந்தால் மட்டுமே நாட்டை அபிவிருத்தி பாதையை நோக்கி இட்டுச் செல்ல முடியும் இந்நிலையில் இவ்வாறான வெகுமதிகள் கொடுத்து அவர்களை விலை பேசுவது கண்டிக்கத்தக்கது என என விமர்சித்து வருகின்றனர்
இந்நிலையில் எவ்வித ஊக்கப்படுத்தல்களோ, அறிவிப்புகளோ இன்றி சுய பாதுகாப்பையும் நாட்டின் பொது பாதுகாப்பையும் கருதி பொதுநலனோடு செயற்பட்டு ஏற்கனவே தடுப்பூசி பெற்றவர்களின் நிலை என்ன? என கேள்வி எழுப்பி இவ்வாறான செயல்கள் அவர்களின் தன்னார்வத்துடனான பொதுநலனை கொச்சப்படுத்துவதாகவும் , மரியாதை இன்றி நடாத்துவதற்கு உதாரணம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.
இருந்தபோதிலும் நவம்பர் மாதம் வரை இவ்வாறான வெகுமதி உடனான தடுப்பூசி ஊக்கப்படுத்தல் திட்டம் நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.