சுவிஸில் கொரோனா தடுப்பூசி பெற்ற 21 பேர் தொடர்ச்சியாக பலி……

0

சுவிட்சர்லாந்தில் இதுவரை 1,307,400 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அதில் 597 பேர்களுக்கு பக்கவிளைவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2,000 பேர்களில் ஒருவருக்கு பக்க விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 21 பேர் அடுத்தடுத்து மாறுபட்ட இடைவெளியில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி 177 பேர்களுக்கு கடுமையான பக்கவிளைவுகளும் பதிவாகியுள்ளது.

மேலும் உயிரழந்த 21 பேரும் இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

சுவிஸ்மெடிக் என்று அழைக்கப்படும் மருத்துவ கண்காணிப்பு குழு குறித்த தகவலை உறுதி செய்துள்ளது.

அதேவேளை தடுப்பூசி தான் இவர்களின் மரணத்துக்கு காரணம் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் சுவிஸ்மெடிக் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிஸில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையை நாடிய சுமார் 10 ஆயிரம் நோயாளிகள் இதுவரை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

கொரோனா பரவும் அதே வேகத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் 2 தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here