சுவிஸிற்கு காத்திருக்கும் மிக மோசமான பேரழிவு! எச்சரிக்கும் நிபுணர்

0

சூரிச் ETH ஆராய்ச்சியாளர் ஒருவர் கொரோனா பெருந்தொற்றின் அடுத்த கட்டம் தொடர்பில் தமது ஆய்வுகளால் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களால் டெல்டா மாறுபாடு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அது இன்னும் மிகப்பெரிய ஆபத்தானதா இல்லை என்று ETH ஆராய்ச்சியாளர் சாய் ரெட்டி கூறியுள்ளார். தற்போது கண்டறியப்பட்டுள்ள இரு வேறுபாடுகளில் இருந்து மூன்றாவதாக புதிய மாறுபாடு ஒன்று உருவாகும்,

அதுவே மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்கிறார் சாய் ரெட்டி. இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடானது மிகவும் பாதிப்பு கொண்டது. ஆனால் இன்னும் அது தப்பிக்கும் மாறுபாடுகளை உருவாக்கவில்லை என்றே கூறுகின்றனர்.

தென்னாபிரிக்காவில் பரவும் பீட்டா மற்றும் பிரேசிலில் பரவும் காமா மாறுபாடுகள் இன்னும் ஆபத்தானதாக உருமாறக்கூடும். எதிர்வரும் ஆண்டில் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தக் கூடும் எனவும், தற்போது நாம் எதிர்கொண்டுவரும் சவால்களை விடவும் கொரோனா 22 மிக மோசமானதாக இருக்கும் என்றே சாய் ரெட்டி உறுதிபட தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆறு மாதங்கள் சுவிட்சர்லாந்துக்கு மிகுந்த சவாலாக இருக்கப் போகிறது என தெரிவித்துள்ள அவர், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களின் ஆர்வம் சரிவடைந்துள்ளது இன்னும் நெருக்கடியை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால், கண்டிப்பாக பொது ஊரடங்கு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலைவரும் என்கிறார் சாய் ரெட்டி.

இருப்பினும், அதிக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், பாதிப்பில் இருந்து தப்புவோமா என்பதில் உறுதி கூற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், அடுத்த சில ஆண்டுகளில் மக்கள் பல தடுப்பூசிகளுக்குத் தயாராக வேண்டும் என்றே சாய் ரெட்டி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here