சுவிட்சர்லாந்தில் முதல்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் வசிக்கும் ஒருவருக்கு நாட்டின் முதல் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை சுவிஸ் சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமையன்று அறிவித்துள்ளனர்.
அந்த நபர் வெளிநாட்டில் இருந்தபோது குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனைக்கு தானாக சிகிச்சைக்கு வந்த அந்த நோயாளிக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இப்போது அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெர்னின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, குரங்கம்மை வைரஸ் பரவிவருவதை உறுதிசெய்துள்ள பிரித்தானியா, ஜேர்மனி, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளின் பட்டியலில் தற்போது சுவிட்சர்லாந்து இணைந்துள்ளது.