சுவிட்சர்லாந்தை அச்சுறுத்தும் பேராபத்து…. Newcastle தொற்றின் பரவல்

0

சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தின் Niederglatt பகுதியில் அமைந்துள்ள ஒரு கோழிப்பண்ணையில் ஜனவரி இறுதியில் Newcastle தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த ஆபத்தான தொற்று என்பது பறவைகள் இனி முட்டையிட முடியாது என்பதை குறிக்கும்.

பறவைகள், விலங்குகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது.

இந்த தொற்றானது மனிதர்களுக்கும் ஆபத்தானது என நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த தொற்றானது எவ்வாறு பண்ணைகளில் பரவியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சூரிச் பல்கலைக்கழக நிபுணர்கள் தரப்பு முன்னெடுத்துள்ள ஆய்வில், காட்டுப்பறவைகளில் இருந்தே குறித்த மர்ம நோய் பண்ணைகளில் பரவியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பறவைகளை கொல்லும் நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.

மட்டுமின்றி குறிப்பிட்ட பண்ணைகளில் இருந்து விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2011 மற்றும் 2017 க்கு இடையில் சுவிட்சர்லாந்தில் நியூகேஸில் நோய் பல பண்ணைகளில் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பறவைகளாலையே ஜெனீவா பகுதிகளில் Newcastle தொற்று பரவியதாக கண்டறியப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here