சுவிட்சர்லாந்து தடுப்பூசி சான்றிதழ்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

0

சுவிட்சர்லாந்தால் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்கள், இன்று 9 ஆம் திகதி ஜூலை 2021 முதல், ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் செல்லுபடியாகும் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்கள் போன்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்திலும் செல்லுபடியாகுமோ, அதே போல சுவிட்சர்லாந்தில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழும் செல்லுபடியாகும் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், பயணிகள் தங்கள் நாட்டுக்குள் நுழையும்போது, கொரோனா சோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டுவதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தல்

மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக அந்தந்த நாடுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்பதையும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே, பயணிகள் தாங்கள் பயணிக்கும் நாடுகளில் நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து விசாரித்து பயணிப்பது சிறந்தது என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here