சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்தோர் தொடர்பில் பெடரல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்

0

சுவிட்சர்லாந்தில், புலம்பெயர்ந்தோர் மற்றவர்களை விட சராசரியாக 10 சதவிகிதம் அதிக வாடகை செலுத்துவதாக தெரியவந்துள்ளது.

மேலும் புலம்பெயர்ந்தோர் அதிக வாடகை செலுத்துவது ஒரு பக்கம் இருக்க, புதிதாக வருவோர், நெருக்கமான, சத்தம் அதிகமுள்ள இடங்களில் வாழவேண்டிய நிலையில் தள்ளப்படுகின்றனர்.

புலம்பெயர்ந்தோர் சராசரியாக நபர் ஒருவருக்கு 32 சதுர மீற்றர் இடத்தில் வாழும் நிலையில், சுவிஸ் குடிமக்களோ சராசரியாக 45 சதுர மீற்றர், அதாவது 40 சதவிகிதம் அதிக இடத்தில் வாழ்கிறார்கள்.

புலம்பெயர்தல் பின்னணி மட்டுமே பிரச்சினை இல்லை.

ஒருவர் எந்த அளவுக்கு கல்வி கற்றிருக்கிறார் என்பது அவர் எந்த வயதுடையவர் என்பது சுவிட்சர்லாந்தில் ஒருவரது நிதி நிலைமையை தீர்மானிக்கும் விடயங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புலம்பெயர்ந்தோரின் நிதி நிலைமை மற்றவர்களை ஒப்பிடும்போது மிக மோசமாக காணப்படுவதாக சுவிஸ் பெடரல் புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here