சுவிட்சர்லாந்தில் புதிய கண்டுப்பிடிப்பு……! வலி இல்லாத தடுப்பூசி முறை…

0

கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அதிக வலியும் இல்லாமல், கொரோனா தடுப்பூசி செலுத்தும் முறை ஒன்றை சுவிட்சர்லாந்து சோதனை செய்துகொண்டிருக்கிறது.

இந்த முறையில், ஒரு சிறிய ஸ்டிக்கர் போல காணப்படும் ஒரு விடயத்தை, கையில் வைத்து அழுத்தினாலே, அதிலிருக்கும் ஆயிரக்கணக்கான கண்ணுக்குத் தெரியாத நுண் ஊசிகள் ( micro needles), லேசாக தோலுக்குள் கொஞ்சமாக நுழைந்து சரியாக அவற்றின் வேலையைச் செய்துவிடும்.

அதாவது, தடுப்பு மருந்தை உடலுக்குள் அனுப்பிவிடும்.

இந்த முறையை பிரித்தானிய நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.

முதன்முறையாக Lausanne பல்கலைக்கழக மருத்துவமனையில் சோதனை முயற்சியாக இந்த முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இந்த முறையில் செலுத்தப்படும் தடுப்பு மருந்து மிகவும் வலிமையான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என நம்பப்படுகின்றது.

அதற்கு பூஸ்டர் டோஸ் போடவேண்டிய அவசியம் கூட இருக்காது என கருதப்படுகிறது.

அத்துடன், இந்த முறையில் பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்தும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செல்களைக் கொன்று, அதிலிருந்து தயாரிக்கப்படுவதால், அது நீண்ட காலம், அதாவது பல ஆண்டுகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வின் முதல் கட்ட முடிவுகள் ஜூன் மாதத்தில் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here