சுவிட்சர்லாந்தில் புதிய தனிமைப்படுத்தல் விதிமுறை அறிமுகம்….!

0

சுவிட்சர்லாந்தில் Omicron வைரஸ் பரவி வருகின்றது.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் காலத்தை ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அதிக எண்ணிக்கையிலான நாடுகள் தங்கள் கொரோனா விதிமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், இப்போது சுவிட்சர்லாந்து அரசும் அதன் கொரோனா தனிமைப்படுத்தல் காலத்தை 10 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைக்கவுள்ளது.

5 நாட்களாக குறைக்கப்பட்டப் பிறகு, தனிமைப்படுத்தலை முடிக்கும் எவரும் 48 மணிநேரங்களுக்கு அறிகுறி இல்லாமல் இருக்க வேண்டும்

அதேபோல் கடந்த 4 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தடுப்பூசியைப் பெற்றவர்கள் தொடர்புத் தனிமைப்படுத்தலுக்குச் செல்ல வேண்டியதில்லை.

Omicron காரணமாக நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதாலும் மற்றும் தொழிலாளர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்ட விடுப்பு (Sick Leave) எடுப்பது அல்லது தனிமைப்படுத்தப்படுவதாலும் பல நாடுகள் தனிமைப்படுத்தலுக்கான கால இடைவெளியைக் குறைத்து வருகின்றன.

இதுவரை, Omicron வைரஸால் குறைவான அறிகுறிகள் மற்றும் குறைந்த இறப்பு விகிதங்களே பதிவுசெய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here