சுவிட்சர்லாந்தில் புதிய நெருக்கடி! மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்…!

0

சுட்சர்லாந்தில் கடந்த 10 நாட்களில் ஓமிக்ரான் மாறுபாடு பரவல் அதிகரித்து காணப்படுகின்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது புதிய நெருக்கடியை உருவாக்கும் வாய்ப்புகளும் அதிக என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும், பல ஊழியர்கள் நோய் பாதிப்பு காரணமாக விடுப்பில் சென்றிருப்பது, ஊழியர்கள் தட்டுப்பாட்டை உருவாக்கும் என மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கே ஓமிக்ரான் பாதிப்பு அதிகம் கண்டுவருவதாக நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பல மாநிலங்களில் பண்டிகை கால விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறந்து செயல்பட துவங்கியுள்ளது.

இந்த கட்டத்தில் சிறார்களின் நிலைமை கவலை கொள்ளும் வகையில் உள்ளது.

மிக குறைவான எண்ணிக்கையிலான சிறார்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க ஆலோசகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here