சுவிட்சர்லாந்தில் பாதுகாவலர்கள் பலர் பணியிடை நீக்கம்…!

0

சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காவல் மையங்களில் பணி செய்த பாதுகாவலர்கள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கடந்த சில மாதங்களாக புகலிடக்கோரிக்கையாளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காவல் மையங்களில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகவே, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்த அரசு, முன்னாள் பெடரல் நீதிபதியான Niklaus Oberholzer தலைமையில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

உடனடி நடவடிக்கையில் இறங்கிய நீதிபதி Niklaus, விசாரணை மேற்கொண்டு, பேசல், Sankt Gallen மற்றும் Neuchatelஇல் அமைந்துள்ள பல காவல் மையங்களில் பணியாற்றிய காவலர்கள் பலரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here