சுவிட்சர்லாந்தில் பயங்கர சம்பவம்…! குளியல் தொட்டியில் உயிரிழந்த இளம் பெண்

0

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் அமைந்துள்ள Gossau பகுதியில் இளம் பெண் ஒருவர், மின் இணைப்பில் இருந்த மொபைல் போனால், குளியல் தொட்டியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்ள்ளார்.

22 வயதேயான குறித்த இளம் பெண், வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளதாக அவசர உதவிக்குழுவினருக்கு உறவினர்களால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற அவசர உதவிக்குழுவினர், மருத்துவர் உள்ளிட்டவர்களால், முதலுதவி அளித்தும் குறித்த இளம் பெண்ணை மீட்க முடியாமல் போயுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணியளவில் குறித்த இளம் பெண், குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்பி, பின்னர் மின் இணைப்பில் இருந்த தமது மொபைலில், அவருக்கு பிடித்தமாக நிகழ்ச்சி ஒன்றை நீராடியபடியே கண்டு களித்திருந்துள்ளார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த மொபைல் குளியல் தொட்டியில் விழுந்து மின்சாரம் தாக்கப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த அவர், அவசர உதவிக்குழுவினரால் முதலுதவி அளிக்கப்பட்டும் பலனின்றி, உயிரிழந்துள்ளார்.

மின் இணைப்பில் இருக்கும் பொருட்களுடன் குளியல் தொட்டியில் இறங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here