சுவிட்சர்லாந்தில் தளர்த்தப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்

0

சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.

ஆகவே, இனி பொது இடங்களுக்குள் நுழைய சுகாதார பாஸ்கள் தேவையில்லை.

பணித்தலம், கடைகள், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளில் இனி மாஸ்க் அணியவேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும்.

இக்கட்டுப்பாடும் அடுத்த மாத இறுதியில் முடிவுக்கு வர உள்ளது.

அதாவது கொரோனா பரிசோதனையில் தங்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதாக தெரியவருவோர் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

சுவிஸ் ஜனாதிபதியான Ignazio Cassis, கொரோனாவுடன் வாழக் கற்றுக்கொள்ளும் ஒரு நிலையில் நாம் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here