சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்

0

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.

அதே நேரத்தில், கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத்து காணப்படுகின்றது.

அதனால் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால், இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்திவந்தவர்களுக்கு சிக்கல் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது..

லிபரல் கட்சியின் தலைவரான Jürg Grossen, திரைப்படங்களுக்கு செல்லுதல் போன்ற சுதந்திரத்தை அனுபவிக்க விரும்புவோர் கொரோனா சான்றிதழை காட்டவேண்டியது கட்டாயம் என்ற விதி கொண்டுவரப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசிய ஆணையத்தின் சுகாதார பிரிவின் தலைவரான Ruth Humbelம், தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு மாஸ்க் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே, தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் இனி பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here