சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி மையமாக மாறும் தேவாலயம்

0

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள புனித ஜேக்கப் தேவாலயம் தடுப்பூசி செலுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.

அங்கு தடுப்பூசி போட வரும் மக்களை இசைக்கலைஞர் ஒருவர் பியானோ வாசித்து மகிழ்வூட்டி வருகிறார்.

வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த தேவாலய தடுப்பூசி மையம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்றால் தடுப்பூசி குறித்த அச்சம் ஏற்படும் என்றும், தேவாலயத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது மனதுக்கு அமைதியை தருவதாகவும் அங்கு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here