சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி பெற போலி தகவல் வழங்கும் மக்கள்…

0

சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உரிய முறைப்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் பலர் பொய்யான தகவலை பதிவு செய்து, தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஏப்ரல் மாதம், துர்காவ் மண்டலத்தில், ஆரோக்கியமான இளைஞர் ஒருவர் தாம், நோய்பாதிக்க வாய்ப்புள்ள ஒருவருடன் வசிப்பதாகக் கூறி தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளார்,

ஆனால் அவர் கூறிய தகவல் உண்மையில் போலியானது.

பெரும்பாலான மண்டலங்கள் போதிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே, தடுப்பூசி பெற அனுமதிக்கின்றனர்.

ஆர்காவ் மண்டலத்தில் தடுப்பூசி பெறுவதற்கு முன்பு மக்கள் மருத்துவ சான்றிதழ்களை உரிய மையத்தில் வழங்க வேண்டும்.

பாஸல் மண்டலத்தில் நாளுக்கு 30 முதல் 50 பேர்களை போலியான தகவலின் அடிப்படையில் தடுப்பூசி அளிக்காமல் திருப்பி அனுப்புவதாகவும் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here