சுவிஸ் அடிப்படை சுகாதார காப்பீட்டின் கீழ் உளவியல் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 ஆம் திகதி முதல் பயிற்சி பெற்ற உளவியலாளர்களால் உளவியல் சிகிச்சை (Psychotherapy) வழங்கப்படும்.
இதனை சுவிட்சர்லாந்தின் அடிப்படை கட்டாய சுகாதார காப்பீட்டின் கீழ் திருப்பிச் செலுத்தப்படும் என RTS தெரிவித்துள்ளது.
இந்த சேவைக்கு தகுதிபெற, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட வேண்டும் மற்றும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
இன்னும் இந்த சேவைக்கான கட்டணங்கள் தெரிவு செய்யப்படவில்லை.
மத்திய அரசும் மண்டலங்களும் திருப்பிச் செலுத்தக்கூடிய சேவைகளுக்கான விலையை தீர்மானிக்க வேண்டும்.
இதற்கிடையில், தற்காலிகமாக 31 ஆம் டிசம்பர் 2024 வரை 154.80 சுவிஸ் ஃபிராங்குகள் கட்டணங்கள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.