சுவிட்சர்லாந்தில் கொரோனா சான்றிதழ் தொடர்பில் வெளியாகிய தகவல்

0

சுவிட்சர்லாந்தில் ஜூன் 7ஆம் திகதி முதல் கொரோனா சான்றிதழ் அமுலுக்கு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இச்சான்றிதழில் நகல் எடுத்து பயன்படுத்தும் வகையிலும், மொபைல் செயலியில் பாதுகாக்கும் வகையிலும் செயல்படுத்த உள்ளனர்.

சுவிஸில் ஜூன் மாத இறுதிக்குள் அமுல்படுத்தப்பதவுள்ளது.

முதலில் பெர்ன் மாநிலத்தில் இந்த கொரோனா சான்றிதழ் அமுல் படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலவசமாக அளிக்கப்படும் இந்த சான்றிதழுக்காக மக்கள் அவர்களின் மருத்துவர்கள் அல்லது மருந்தகங்கள் அல்லது தடுப்பூசி பெற்றுக்கொண்ட இடங்கள் ஆகியவற்றை நாடலாம்.

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் அல்லது கொரோனா சோதனை மேற்கொண்டவர்கள் குறித்த சான்றிதழுக்கு தகுதியானவர்கள்.

மேலும், வெளிநாட்டு பயணங்களுக்கு குறித்த சான்றிதழ் பயனுள்ளதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here