சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுவதற்கான நடைமுறைகள்…….

0

சுவிஸ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது சிக்கலானது.

அதற்கான விதிமுறைகள் மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடும்.

அத்துடன், சுவிஸ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமும், சுவிட்சர்லாந்தில் எங்கு வாழ்கிறிறோம் என்பது பொருத்து மாறுபடும்.

சுவிஸ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான பெடரல் கட்டணத்தில் மாற்றமில்லை.

அது பெரியவர்களுக்கு 100 சுவிஸ் ஃப்ராங்குகள்.

ஆனால், மாகாண மற்றும் communal மட்டத்திலான கட்டணம், இடத்துக்கு இடம் மாறுபடும்.

இந்நிலையில், சுவிஸ் ஆய்வு ஒன்றில் சுவிட்சர்லாந்தின் எந்த மாகாணத்தில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அதிக செலவு பிடிக்கும்.

மேலும் எந்த மாகாணத்தில் குறைந்த செலவு பிடிக்கும் என்பது போன்ற விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, Schwyz மாகாணத்தில் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு மிக அதிக கட்டணம் என்பது தெரியவந்துள்ளது.

Schwyz மாகாணத்தில் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம், 3,600 சுவிஸ் ஃப்ராங்குகள் ஆகும்.

அதாவது, பெடரல் கட்டணம் 100 ஃப்ராங்குகள், மாகாண கட்டணம் 500 ஃப்ராங்குகள் மற்றும் communal கட்டணம் 3,000 ஃப்ராங்குகள்!

அதே நேரத்தில், Lausanne மாகாணத்திலோ நான்கு மடங்கு குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Lausanne மாகாணத்தில் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம், 800 சுவிஸ் ஃப்ராங்குகள் ஆகும்.

அதாவது, பெடரல் கட்டணம் 100 ஃப்ராங்குகள், மாகாண கட்டணம் 450 ஃப்ராங்குகள் மற்றும் communal கட்டணம் 250 ஃப்ராங்குகள்!

இதுபோக, குடியுரிமை வகுப்புக்கு கட்டணம், மொழித்தேர்வுக்கு கட்டணம், குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பத்துக்கான ஆவணத்துக்காக ஒரு கட்டணம் என பல்வேறு மறைமுக கட்டணங்களும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here