சுவிட்சர்லாந்தில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள விசித்திர பிரச்சினை….

0

சுவிட்சர்லாந்தின் Winterthur நகரில் வாழும் Ullrich Frey (74) என்பவருக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை.

அவர் உள்ளூர் ஓய்வூதிய அலுவலகத்தை அழைத்து தனக்கு ஏன் இன்னமும் ஓய்வூதியம் வரவில்லை என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் அளித்த பதில், நீங்கள் இறந்துவிட்டீர்கள்,

அதனால்தான் உங்களுக்கு ஓய்வூதியம் அனுப்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சிக்குள்ளான Frey, என்ன நடந்தது என விசாரனையில் இறங்கியுள்ளார்.

நீண்ட விசாரணைக்குப் பின், இறந்தது அவரது முன்னாள் மனைவி என்பது தெரியவந்துள்ளது.

அவருக்கு பதிலாக கணினியில் Frey இறந்ததாக தவறுதலாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Frey தன் மனைவியைப் பிரிந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

ஆகவே, அவர் இறந்தது Freyக்கு தெரியவில்லை. ஆனால், அவருக்கு பதிலாக Frey இறந்ததாக கணினியில் பதிவாக, அவரது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிட்டது.

ஆக, Frey தான் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here