சுவிட்சர்லாந்தில் ஆரம்பமாகியுள்ள கொரோனா சான்றிதழ் விநியோகம்..!

0

சுவிட்சர்லாந்தில் கொரோனா சான்றிதழ் விநியோகம் ஆரம்பமாகி முதல் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது.

மின்னணு அல்லது காகித வடிவில் கிடைக்கும் இந்த கொரோனா சான்றிதழ் சர்வதேச பயணம் முதல் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும்.

அடுத்தபடியாக ‘light’ கொரோனா சான்றிதழ் ஒன்றும் தயாராக உள்ளது.

இந்த ‘light’ சான்றிதழ், சுவிட்சர்லாந்துக்குள் மட்டும் பயன்படுத்தக்கூடியது.

தரவுகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் இந்த சான்றிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயணத்துக்கான கொரோனா சான்றிதழ் தேவையில்லையானால், அதற்கு பதில் இந்த ‘light’ சான்றிதழைப் பெற்று, தேவையானால் அதை விளையாட்டுப் போட்டிகள், உணவகங்களுக்குச் செல்லுதல் போன்ற விடயங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த ‘light’ சான்றிதழ் அடுத்த மாதம் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here