சுவிட்சர்லாந்து குடிமக்கள் முழு முகத்தை மறைக்கும் முக்காடுகளை தடை செய்யும் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பின் முடிவுகளின்படி, 51.21% வாக்காளர்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் மக்கள் பொதுஇடங்களில் தங்கள் முகங்களை மறைக்கக்கூடாது.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக முகக் கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய தடை அடிப்படையில், முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா மற்றும் நிகாப்பை தடை செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையில் 5.2% முஸ்லிம்கள் உள்ளனர்.
பெரும்பாலும் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, துருக்கி மற்றும் கொசோவோவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முகம் மறைக்கும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், சுவிட்சர்லாந்து இதேபோன்ற தடைகளை அறிமுகப்படுத்திய பல ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்துள்ளது.
2011 ஆம் ஆண்டில் பிரான்ஸ் முழு முகத்தை மறைக்கும் முக்காடுகளை தடை செய்தது.
அதனை தொடர்ந்து டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து மற்றும் பல்கேரியா ஆகியவை பொது இடங்களில் இத்தகைய ஆடைகளுக்கு தடைகளை விதித்துள்ளன.