சுவிட்சர்லாந்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!

0

சுவிட்சர்லாந்தில் கொவிட் பரிசோதனையை கட்டாயப்படுத்தப்படாமல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் வரவேற்கப்படுகின்றனர்.

சுவிட்சர்லாந்திற்குள் நுழைவதற்கு முன்பு எதிர்மறையான PCR அல்லது Rapid Antigen சோதனையை வழங்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை.

பயணிகள் சுவிட்சர்லாந்தின் ஏரிகள் மற்றும் கிராமங்கள் முதல் புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலைகள் வரை அனைத்தையும் கவலையின்றி அனுபவிக்க முடியும்.

சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் கவுன்சில் (FC) அறிவித்த பிற கோவிட் தொடர்பான நடவடிக்கைகள்:

31 ஆம் திகதி ஜனவரி 2022 முதல், கொவிட்-19 சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலம் 270 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதில் கொவிட் நோயிலிருந்து மீண்டதற்கான சான்றாக வழங்கப்பட்ட சான்றிதழ்கள் உட்பட, சுவிஸ் சான்றிதழ் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கீகரிக்கப்படும்.

விமானம் அல்லது நீண்ட தூர பேருந்து சேவைகள் மூலம் சுவிட்சர்லாந்திற்கு வரும் பயணிகள் மட்டுமே பயணிகள் இருப்பிடப் படிவத்தை (PLF) பூர்த்தி செய்ய வேண்டும்.

தடுப்பூசி போடப்பட்ட அல்லது கடந்த நான்கு மாதங்களில் குணமடைந்த நபர்களுக்கு தொடர்பு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தொடர்பு தனிமைப்படுத்தல் பெப்ரவரி மாதம் இறுதி வரை மட்டுமே இருக்கும்.

தடுப்பூசி போடப்படாத மற்றும் கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டு வராத பயணிகள், சுவிட்சர்லாந்தில் நுழைவதற்கு முன்பு எதிர்மறையான COVID-19 சோதனை முடிவை வழங்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here