சுவிட்சர்லாந்தின் திடீரென பற்றி எரிந்த கார்… நூலிழையில் தப்பிய குடும்பம்

0

சுவிட்சர்லாந்தின் Buochs பகுதியில் அமைந்துள்ள A2 பிரதான சாலையில் திடீரென கார் பற்றி எரிந்துள்ளது.

குறித்த காரில் இருந்து குடும்பம் ஒன்று நூலிழையில் தப்பியுள்ளமை பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை மதியத்திற்கு பின் அந்த வழியாக கடந்து சென்ற குறித்த கார் திடீரென்று புகை வெளியேற, அதில் பயணம் செய்த நால்வர் கொண்ட குடும்பம் சட்டென்று காரை நிறுத்திவிட்டு வெளியேறியுள்ளனர்.

அடுத்த நொடி அந்த கார் தீ கோளமாக மாறியுள்ளது.

பெல்ஜியம் நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இச்சம்பவத்தால் Buochs பகுதியில் 2 மணித்தியாலம் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here