சுழிபுரத்தில் 18 வயது இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0

யாழ். சுழிபுரத்தில் நண்பர்களுடன் வயல் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று(06.11.2021) இடம்பெற்றது.

நீரில் மூழ்கிய குறித்த இளைஞன் காப்பாற்றப்பட்டு மூளாய்க் கூட்டுறவு வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை, மேற்படி சம்பவத்தில் மூளாய்ப் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவர் ஒருவரே உயிரிழந்தவராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here