சுற்று சூழலை சுத்தம் தொடர்பில் அரசின் அதிரடி திட்டம்…

0

இலங்கையில் நாளை மற்றும் நாளை மறுதினம் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

நாளை உலக சுற்று சூழல் தினம் என்பதால் இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுவாசம் வழங்கும் சுற்றாடல் என்ற தலைப்பில் ஒவ்வொரு வீட்டிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாதத்தின் 5 ஆம் திகதி மற்றும் 6 ஆம் திகதி வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்துவதனை வீடியோ எடுத்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்புமாறு பாடசாலை மாணவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்களிலும் ஒவ்வாரு 3 மணித்தியாலத்திற்கு ஒரு முறை 3 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு 5000 ரூபாய் வரை பரிசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here