சுற்றுலா விடுதியின் 5 ஆவது மாடியிலிருந்து தவறிவீழ்ந்து ஒருவர் பலி!

0

நுவரெலியாவில் உள்ள பிரபல சுற்றுலா விடுதியின் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், மேற்படி சுற்றுலா விடுதியின் ஊழியரான, கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்றிரவு விடுதியில் விருந்துபசாரம் இடம்பெற்றுள்ளதுடன், அதிகாலை 3 மணியளவில் அவர் தங்கியிருந்த ஐந்தாவது மாடியில் உள்ள அறையின் ஜன்னலிலிருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here