கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து உலக நாடுகளுக்கிடையே பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா இரண்டு வருடங்களுக்கு பின் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
முதல் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட மாட்டாது.
இதனை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் இன்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியாக வெளிநாட்டவர்கள் அந்த நாட்டு எல்லையைத் தாண்டுவதற்கு அவுஸ்திரேலியா இதுவரை காலமும் இறுக்கமான தடைகளை விதித்திருந்தது.
இந்நிலையில், தற்போத 80சதவீதமான அவுஸ்திரேலிய மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் முழு தடுப்பூசியினை பெற்றவர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் பட்சத்தில் அவர்களுக்கு எந்தவிதமான தடையும் விதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மாதம் தடுப்பூசி பெறாத நிலையில், அவுஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்ட டெனிஸ் விளையாட்டு வீரர் நொவாக் ஜோக்கோவிக் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.