சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் புதிய திட்டம்!

0

இலங்கைக்கு எதிர்வரும் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் நிர்வகிக்கப்படும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டை அதிகரிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

தொடர்ந்து நான்கு சனிக்கிழமைகள் எதிர்வரும் செப்டம்பர் 17, 24 மற்றும் அக்டோபர் 01, 08 ஆகிய நாட்கள் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான நாட்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் பிரதம தொற்றுநோயியல் நிபுணர் சமித கினிகே தெரிவிக்கையில்,

தகுதியுடைய எவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள ஒவ்வொரு சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளிலும், தலா 3 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும்.

ஆதார வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரசு மருத்துவமனைகளில் மேற்படி நான்கு சனிக்கிழமைகளில் தமக்கான பிரத்தியேக தடுப்பூசி மையத்தில் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

நாடளாவிய ரீதியில் தற்போதுள்ள தடுப்பூசி நிலையங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் வழமை போன்று இயங்கும் என வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.

12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி செலுத்தல், இந்த வாரத்திலும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

2022 ஜூலையில் இறக்குமதி செய்யப்பட்ட பைஸர் கொவிட்-19 தடுப்பூசிகளின் காலாவதி திகதியை உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரையின் பேரில் சுகாதார அமைச்சு மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்தது.

அந்த பரிந்துரைக்கமைய., FN 5436, FN 2898, FM 9281 மற்றும் FM 5450 தொகுதியின் கீழ் பெறப்பட்ட ஃபைஸர் தடுப்பூசிகளின் காலாவதி திகதியை ஜூலை 31 முதல் காலாவதியாகும் திகதியிலிருந்து, எதிர்வரும் ஒக்டோர் 31 ஆம் திகதிவரை அமைச்சு அதிகாரப்பூர்வமாக நீடித்துள்ளது.

இலங்கை 2022 ஜனவரிக்குள் 18,000,000 பைஸர் தடுப்பூசிகளை வாங்கியுள்ளது.

அதில் 11,852,235 தடுப்பூசிகள் செப்டம்பர் 14 க்குள் செலுத்தப்பட்டன. ஏறத்தாழ 6,147,765 தடுப்பூசிகள் இன்னும் கையிருப்பில் உள்ளன.

ஒகஸ்ட் மாத தொடக்கத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

ஒகஸ்ட் மாதத்தின் ஆரம்ப வாரங்களுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here