சுற்றுலாப்பயணி ஒருவர் கடற்கரையிலிருந்து சடலமாக மீட்பு

0

ஹபராதுவ பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள கடற்கரையிலிருந்து உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

41 வயதுடைய பிக்டொப் விக்டர் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுலா பயணி கடந்த 06 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளமையுடன், ஹபராதுவ, லுனுமோதர பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளார்.

இவர் கடலில் நீராடிவிட்டு பின்னர் கரையில் படுத்துறங்கியுள்ளார். இதன்போதே, அவர் மரணமடைந்துள்ளார் என்று விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

மேலும், மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here