உக்ரைன் தலைநகர் Kyivஇல், குண்டுகளுக்குத் தப்ப சுரங்க ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில், பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
நேற்று இரவு 8.30 மணியளவில், போருக்கு நடுவில் பிறந்த குழந்தைக்கு மியா என பெயரிடப்பட்டுள்ளது.
பிரசவ வேதனையில் கதறிய 23 வயது கர்ர்பிணியின் குரலைக் கேட்டு உக்ரைன் பெண் பொலிசார் அந்தப் பெண் பிரசவிக்க உதவியுள்ளார்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மியாவின் பிறப்பை அற்புதம் என புகழ்கிறார்கள் உக்ரைனியர்கள்.
இந்த யுத்த காலத்தில் பிறந்த குழந்தை மியா மட்டுமல்ல, மருத்துவமனை ஒன்றின் தரைத்தளத்தில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
அந்தப் பெண்ணின் அனுமதியுடன், பிரசவம் பார்த்த மருத்துவர் அந்த தாய் மற்றும் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.