சுய தனிமைப்படுத்திக் கொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ

0

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த 5 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் ஈடுப்படுவதாக அறிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடியாக சந்தித்தமை தெரியவந்துள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அவர் உடனடியாக ரேபிட் சோதனையை மேற்கொண்டார்.

அந்த சோதனையின் முடிவில் அவருக்கு தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர், சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதாகவும், 5 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

“நான் நன்றாக உணர்கிறேன், வீட்டிலிருந்து வேலை செய்வேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் – தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

50 வயதான ட்ரூடோ, முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார்.

மேலும், ஜனவரி மாதம் ஒட்டாவாவில் உள்ள ஒரு மருந்தகத்தில் கூடுதலாக கோவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸையும் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here