சுயஸ் கால்வாயில் ஏற்பட்ட கப்பல் விபத்து..! உலக சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

0

தைவானின் எவர்க்ரீன் மெரைன் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி. எவர்கிவன் கப்பல் செவ்வாயன்று சீனாவிலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாம் துறைமுகத்திற்குச் சென்ற போது சூயஸ் கால்வாயின் இரு கரைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது.

400 மீற்றர் நீளமும் 59 மீற்றர் அகலமும் கொண்ட இந்த கப்பல் சுமார் 20,000 கொள்கலன்களைக் கொண்டுள்ளதுடன், அது சுமார் 200,000 டன் எடை கொண்டதென தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது கொள்கலன் கப்பல் நான்கு கால்பந்து மைதானங்களுக்கு சமமானதாகும்.

திடீரென அந்த பகுதியில் ஏற்பட்ட காற்று காரணமாக கப்பல் இவ்வாறு சிக்கியுள்ளது.

கால்வாயில் ஏற்பட்ட கப்பல் விபத்து காரணமாக கிட்டத்தட்ட 200 கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன.

மேலும் இதன் விளைவாக, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் ஏற்கனவே அதிகரித்து வருவதாகவும், உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here