சுடுகாட்டிற்கு காதலியை அழைத்து சென்ற காதலனின் கொடூரச் செயல்

0

இந்தியாவில் புதுச்சேரி திருக்கனூரை அடுத்த சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் ராமன்.

இவருக்கு ராஜஸ்ரீ(17) என்ற மகள் உள்ளார். ராஜஸ்ரீ சேதராபட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரிக்கு சென்று அவர் வீட்டிற்கு திரும்பாதால் குடும்பத்தினர், அவரை போனில் தொடர்பு கொண்ட போது, நான் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேம், வந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால், அவர் வீடு திரும்பவேயில்லை, இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், உடனடியாக காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையில், வில்லியனூரை அடுத்த பொறையூர் பேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் மர்மமான முறையில் சாக்கு மூட்டை கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பொலிசார் அங்கு விரைந்து சென்று, சாக்குமூட்டை பிரித்து பார்த்த போது, பெண் ஒருவரின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் காணமல் போன ராஜஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்பெண்ணின் கல்லூரி சென்று திரும்பும் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

அப்போது, பொறையூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ராஜஸ்ரீயை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து வந்தது தெரியவந்தது.

பொலிசார் உடனடியாக அவரைப் பிடித்து விசாரித்த போது, அந்த நபரின் பெயர் பிரதீஷ் என்பதும், அவரும் ராஜஸ்ரீயும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

பிரதீஷை காதலித்து வந்த ராஜஸ்ரீ, வேறு ஒரு நபருடனும், பழகி வந்துள்ளார்.

இதனால் இது குறித்து பேசுவதற்காக, அவரை சுடுகாட்டு பகுதிக்கு ராஜஸ்ரீயை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஆகியதால், பிரதீஷ், ராஜஸ்ரீயை அடித்துள்ளார்.

இதில், ராஜஸ்ரீயின் காதில் இரத்தம் வழிந்ததில், அவர் மயங்கி விழுந்துள்ளார்.

அதன் பின் தன்னுடைய 14 வயது தம்பியின் உதவியுடன் ராஜஸ்ரீயின் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி, சுடுகாட்டில் இருக்கும் பள்ளம் ஒன்றில் தூக்கி வீசிச் சென்றுள்ளது தெரியவந்தது.

பொலிசார், தற்போது 14 வயதான பிரதீஷின் தம்பியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here