சுகாதார ஊழியர்களின் தொடரும் பணிப் பகிஷ்கரிப்பு- வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிப்பு

0

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமை காரணமாக, தம்மால் ஆரம்பிக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தாதியர்கள், நிறைவுகாண் மருத்துவ சேவைகள், மேலதிக வைத்திய சேவை உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்ட பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவிக்கின்றார்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7ம் திகதி முதல் இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் பணிப்புரியும் 65000 வரையான சுகாதார ஊழியர்கள் இந்த பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அமைச்சருடனான சந்திப்பு தோல்வி அடைந்துள்ள நிலையில், தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சமன் ரத்னபிரிய தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here