சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது!

0

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது.இதன்படி 8 மாவட்டங்களை சேர்ந்த 219,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி முதலான மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக, 10 பேர் மரணித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
11 வீடுகள் முழுமையாகவும், 724 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

சீரற்ற வானிலையால் 3,528 குடும்பங்களை சேர்ந்த 15,499 பேர், 69 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
612 குடும்பங்களை சேர்ந்த 2,471 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here