சீரற்ற வானிலையால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் தொடர்ந்து காணப்படுவதால், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடனான காலநிலை நிலவுகிறது.

இந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக 2 மாவட்டங்களில் 269 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு 45 குடும்பங்களைச் சேர்ந்த 187 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here