சீனாவின் காவல்துறை கணினி மையத்தில் ஊடுருவல் இடம்பெற்று சில தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சிறையில் உள்ள ஆயிரக்கணக்கானோரின் படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தப்பி சென்றால் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ள சிலரது படங்களும் அடங்குகின்றன.
உய்கர் இன மக்களை நன்னடத்தை முகாம்களில் தங்கவைத்திருப்பதற்காக சீனா பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
மீள்கல்வி முகாம்கள் என்று அரசாங்கம் அழைக்கின்ற இந்த முகாம்களில் உய்கர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் சுமார் 10 லட்சம் பேர் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டமையை சீனா மறுத்தது.
எனினும் ஜின்ஜியாங்கில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது பயங்கரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முகாம்களை அமைத்ததாக சீனா பின்னர் ஏற்றுக் கொண்டது.
இவ்வாறான பின்னணியில் வெளியாகியுள்ள படங்களில் உய்கர் இன மக்களின் படங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.