சீனா இல்லாமல் கொவிட் மர்மத்திற்கு தீர்வு காண முடியாது. – அமெரிக்கா

0

கொவிட் 19 பரவியமைக்கான ஆரம்ப காரணத்தை கண்டறிவதற்கு வுஹானில் உள்ள ஆய்வுக்கூட தகவல்கள் மேலும் தேவைப்படுவதகவும் சீனாவின் ஒத்துழைப்பின்றி தீர்வு கிடைக்காதென்றும் அமெரிக்க புலனாய்வு சமூகம் குறிப்பிட்டுள்ளது.

4.6 மில்லியனுக்கும் அதிக மக்களை உயிர்களை பலியெடுத்துள்ள இந்த வைரஸின் தோற்றத்தை கண்டறிய சீனா உதவி புரிய முடியும் என்றும் அவர்கள் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரவிட்ட விசாரணை அறிக்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்காவும் ஏனைய நட்பு நாடுகளும் விசாரணைக்கு ஒத்துழைப்பதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்றும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

சர்வதேசத்தின் விசாரணையை சீனா மறுத்து வருவதுடன் விசாரணையாளர்கள் அங்கு வருவதற்கும் தடை விதிக்கின்றது.

இந்த நிலையில் வெளிப்படையான விசாரணைக்கு வலியுறுத்துவதால் அமெரிக்கர்கள் மற்றும்; ஆசிய மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழிவகுக்கும் என்றும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரபணுவை தேடும் செயற்பாடுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடலாமே தவிர புலனாய்வு அதிகாரிகள் தலையிட முடியாது என்றும் அறிவியலை கேளிக்கையாக்க முற்பட வேண்டாம் என வொஷிங்டனில் உள்ள சீன தூதுரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவின் கட்டாயம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்களை அழைக்க வேண்டும் என்றும் தூதுரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச விசாரணைகளை தடுப்பதில் சீனா ஒற்றைக்காலில் இருப்பது சிறந்த ஒன்றல்ல என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here