சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து காணப்படுகின்றது.
அண்மையில் மதுபான பார் ஒன்றுக்கு சென்ற பலருக்கும் கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டது.
இதையடுத்து பாருக்கு வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நகரத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் அனைவரும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.