சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று…!

0

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடி வருகின்றது.

இந்நிலையில் சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

ஆனால் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 27 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை.

அந்த வகையில் 22 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 92,095 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here