சீனாவில் 17 லட்ச மக்களின் உயிருக்கு காத்திருக்கும் பேராபத்து…

0

சீனாவில் ஜீரோ கோவிட் திட்டம் நீக்கப்பட்டால் 17 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என ஷாங்காய் புடான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறைவான தடுப்பூசி எண்ணிக்கை, மிக குறைந்த செயல்திறன் கொண்ட தடுப்பூசி மருந்து உள்ளிட்டவை ஒமிக்ரானை எதிர்கொள்ளாது என தெரிவித்துள்ளனர்.

சீனாவில் நடத்தப்பட்டும் கொரோனா பரிசோதனை முறைகள், கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் இன்றி ஒமிக்ரான் பரவல் எண்ணிக்கை மே முதல் ஜூலையிலான கொரோனா அலையில் மட்டும் 11.22 கோடியாக அதிகரிக்கும்.

இவர்களில் சுமார் 51 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் ஷாங்காய் நேற்று மட்டும் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை 1,487 ஆக பதிவாகி இருக்கிறது.

பீஜிங்கில் கொரோனா பரவல் எண்ணிக்கை திங்கள் கிழமை அன்று 74 ஆக இருந்தது.

ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 37 ஆக குறைந்து இருக்கிறது.

முன்னதாக உலக சுகாதார மையம் சீனாவில் ஜீரோ கோவிட் திட்டத்தை நீக்குவது பற்றி பரிசீலனை செய்ய வலியுறுத்தி இருந்தது.

சீனாவின் ஜீரோ கோவிட் திட்டம் மாவட்ட எல்லைகளை மூடுவது, கட்டாய தனிமைப்படுத்தல் மற்றும் அனைவருக்கும் தொடர் கொரோனா பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது.

இது போன்ற கடுமையான விதிகளால் சீனாவின் பெரும்பாலான பகுதிகள் உலகை விட்டே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here