சீனாவில் மீண்டும் கொரோனா… கொடூரமாக கொலை செய்யப்படும் வளர்ப்பு பிராணிகள்

0

சீனாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா பாதித்தவர்களின் பூனை, நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை கொல்ல சாக்கு மூட்டையில் கட்டி வைத்திருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஷாங்காயில் ஏறத்தாழ 2 கோடியே 60 லட்சம் பேர் கடும் கொரோனா கட்டுப்பாடுகளால் தவித்து வருகின்றனர்.

கடும் சித்ரவதைகளை தாங்க முடியாத சிலர் தங்கள் வீட்டு பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொற்று பாதித்தவர்களின் வளர்ப்பு பிராணிகளை கைப்பற்றும் சுகாதார பணியாளர்கள் அவற்றை கொடூரமாக அடித்துக் கொல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here