சீனாவில் மனிதர்களிடையே கண்டுபிடிக்கப்பட்ட பறவை காய்ச்சல்….!

0

உலகில் முதல்முறையாக சீனாவில் ஒருவருக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சினாவின் ஜியாங்சு நகரைச் சேர்ந்த 41 வயதான நபர் ஒருவர், காய்ச்சல் மற்றும் பிற உடல் உபாதைகளோடு கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கடந்த மே 28 ஆம் திகதி எச் 10 என் 3 ( H10N3) என்ற பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அவருக்கு இந்த பறவை காய்ச்சல் நோய்த் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய தொடர்புகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு இந்த பறவை காய்ச்சல் தொற்று ஏற்படவில்லை எனவும், தொற்றால் பாதிக்கப்பட்டவர் வீடு திரும்பத் தயாராக இருப்பதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த எச் 10 என் 3 ( H10N3) வைரஸ் தொற்று, குறைந்த அளவு பாதிப்பையே ஏற்படுத்தகூடியது.

மேலும் இது கோழிகளின் மூலம் பரவும் வைரஸின் திரிபு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here