சீனாவில் 133 பயணிகளுடன் டென்சியாங் என்ற பகுதியில் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் விபத்தில் சிக்கியது.
குன்மிங் நகரத்தில் இருந்து குவாங்சூ மாகாணம் நோக்கி விமானம் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது.
தெற்கு சீனாவில் உள்ள மலைப் பகுதியில் விமானம் விழுந்து தீப்பற்றி எரிந்துள்ளது.
விபத்தில் பயணிகள் உயிரிழப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.