சீனாவில் திருமணம் ஆகாமல் வாழும் ஆண்கள்..! வெளியாகிய தகவல்

0

xx

சீனாவில் சுமார் 3 கோடி ஆண்கள் திருமாணம் ஆகாமல் வாழ்வதாக சீன தேசிய புள்ளிவிபரப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இதற்கு காரணம் பெண் குழந்தைகளின் பிறப்பு வீதம் குறைவு என குறிப்பிடப்படுகின்றது.

1979 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஒரு குழந்தை பிறப்பு திட்டம் சீன அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது.

இதன்போது சில தாய்மார்கள் தமக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக கருகலைப்பு செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இத்திட்டத்தினாலேயே இன்றும் அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என சுட்டிக்காட்டும் சியான் பல்கலைக்கழகம், 2016ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் இந்த ஒரு குழந்தை திட்டம் மாற்றியமைக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தற்போதைய பரம்ரை அலகுகளின்படி பெண் குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சீனாவின் 7ஆவது தலைமுறையில் 12 இலட்சம் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் இவர்களில் 111. 3 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் என்ற அடிப்படையில் பிறப்பு வீகிதம் அமைந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரப் பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here